FAQs

Frequently Asked Questions



Read in  English  | हिंदी  |    বাংলা   |  తెలుగు  |  മലയാളം  |  ଓଡ଼ିଆ  |  ગુજરાતી  |  मराठी  |  ಕನ್ನಡ  |  অসমীয়া  

ராமகிருஷ்ண சங்கத்தில் சேர்வது சம்பந்தமாக அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளும் பதில்களும்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையையும் போதனைகளையும் இளைஞர்கள் பலர் படித்து அவற்றிலிருந்து உத்வேகம் பெற்று அவர்களும் ராமகிருஷ்ண சங்கத்தில் சேர்ந்து துறவு வாழ்க்கை மேற்கொள்ள எண்ணுகிறார்கள். வேதாந்தம் பற்றிய சொற்பொழிவுகளைக் கேட்டும் சிலருக்குத் துறவு ஆசை ஏற்படலாம்; உலக இன்பங்களின் நிலையற்ற தன்மையை உணர்ந்து சிலருக்குத் துறவு ஆசை தோன்றலாம். ராமகிருஷ்ண சங்கத்தின் துறவிகள் செய்யும் சேவைகளால் ஈர்க்கப்பட்டு, அந்தப் பணிகளுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் கர்ம வீரர்களும் உண்டு. தூண்டுதல் எதுவாக இருந்தாலும், மடத்தில் துறவியாகச் சேரும் முன் பல விஷயங்களை ஆராய்ந்து தெளிவு பெற வேண்டும். அப்படிச் சேர நினைக்கும் வருங்காலத் துறவிகளுக்காகவே சில விஷயங்கள் இங்கு கேள்வி–பதில் வடிவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
  1. ராமகிருஷ்ண சங்கம் என்றால் என்ன?
இங்கு ‘சங்கம்’ என்பது ஒரே லட்சியத்தைக் கொண்ட துறவிகளின் சங்கத்தைக் குறிக்கிறது. ராமகிருஷ்ண சங்கம் ஒரு பதிவு பெற்ற இயக்கம். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துக்களின் அடிப்படையில் அவரது சீடர்களால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. அவர்களில் தலைமைச் சீடர் சுவாமி விவேகானந்தர். தூய அன்னை ஸ்ரீசாரதாதேவி தனது ஆன்மீக நிலையில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணருக்குச் சமமாக விளங்கினார். தாயன்புடனும் ஆன்மீக உயர்வுடனும் அவர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ராமகிருஷ்ண சங்கத்தை வழிநடத்தினார். ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் என்ற இரண்டு அமைப்புகளைக் கொண்டது ராமகிருஷ்ண சங்கம். இவை இரண்டும் பதிவு செய்யப்பட்டவை. இவற்றின் தலைமையகம் பேலூர் மடம். இதற்கு உலகம் முழுவதும் 200–க்கும் அதிகமான கிளைகள் உள்ளன. இந்த இரண்டு அமைப்புகளின் வரலாறு, நோக்கம், மற்றும் செயல்பாடுகளைப் பற்றி இங்கு (website) அறியலாம்.
  1. ராமகிருஷ்ண சங்கத்தில் ‘சேர்தல்’ என்றால் என்ன?
குடும்பம், நண்பர்கள், தொழில், வேலை, உலகப் பற்றுகள் என அனைத்தையும் விட்டுத் துறவு வாழ்க்கையை மேற்கொள்வது; ராமகிருஷ்ண மடத்தின் ஏதாவது ஒரு கிளையில் தங்கித் தனது வாழ்க்கையை ஆன்மிக சாதனைக்காகவும் பலன் எதிர்பாராத சேவைக்கும் அர்ப்பணித்துக்கொண்டு வாழ்வது — இதுவே ராமகிருஷ்ண சங்கத்தில் ‘சேர்தல்’ என்பது.
  1. ராமகிருஷ்ண சங்கத்தில் துறவி ஆவதற்கான அடிப்படைத் தகுதிகள் என்ன?
- ஆண்கள் மட்டுமே ராமகிருஷ்ண சங்கத்தில் சேர்ந்து துறவி ஆக முடியும். 18 முதல் 28 வரை வயதுடையவர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பட்டமேற்படிப்பு படித்தவர்களுக்கும் பொறியியல், மருத்துவம் படித்தவர்களுக்கும் உச்ச வயது வரம்பு 30. மேலை நாட்டவருக்கு உச்ச வயது வரம்பு 36. மேலும் விவரங்களுக்கு பேலூர் மடத்தைத் தொடர்பு கொள்ளவும்: <mail@rkmm.org>
  1. இளம்பெண்கள் துறவு வாழ்க்கை வாழ விரும்பினால் மடத்தில் சேரலாமா?
ராமகிருஷ்ண சங்கம் ஆண்களுக்கானது மட்டுமே. பெண்களுக்கு ஸ்ரீசாரதா மடம் என்ற தனி அமைப்பு உள்ளது. அவர்களும் ராமகிருஷ்ண மடத்தின் லட்சியங்களைப் பின்பற்றுபவர்களே! துறவு வாழ்க்கை வாழ விரும்பும் பெண்கள் ஸ்ரீசாரதா மடத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். ஸ்ரீசாரதா மடத்தின் தலைமையகம் கொல்கத்தாவில் தட்சிணேசுவரத்தில் உள்ளது. மின்னஞ்சல்: <saradamath.office@gmail.com>
  1. நான் திருமணமானவன். என்னால் மடத்தில் சேர முடியுமா?
மன்னிக்கவும்! திருமணமாகாத ஆண்கள் மட்டுமே சேர முடியும். விவாகரத்து பெற்றவர்களும் சேர முடியாது. இருந்தாலும், எல்லோரும் பக்தர்களாகவோ அல்லது தன்னார்வலத் தொண்டர்களாகவோ நமது சங்கத்துடன் எப்போதும் இணையலாம். நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கிளை மடத்தை அணுகவும்.
  1. எல்லாவற்றையும் துறக்கப் போகிறவனுக்கு ஏன் கல்வித் தகுதி வலியுறுத்தப்படுகிறது?
ஆன்மீக வாழ்க்கைக்குக் கல்வித் தகுதி தேவையில்லைதான். ஆனாலும், பின்வரும் காரணங்களுக்காக கல்வித் தகுதி அவசியமாகிறது.

a) துறவு வாழ்க்கையை மேற்கொள்வது என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவு. அப்படி முடிவெடுப்பதற்கு மன முதிர்ச்சி அவசியம்; அத்தகைய மன முதிர்ச்சிக்குப் படிப்பு துணைபுரியும்.

b) பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் என பல்வேறு அமைப்புகளை நமது மடத்தின் துறவிகள் நடத்தி நிர்வகிக்கின்றனர். அதன் மூலம் மக்களுக்குப் பலவழிகளிலும் சேவை புரிகின்றனர். இன்னும், தேசிய அளவிலும் உலகளவிலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உரையாற்ற அழைக்கப்படலாம். உயர்ந்த கல்வித் தகுதி இருந்தால் இந்தச் சூழ்நிலைகளைச் சிறப்பாகக் கையாளலாம்.

c) சில இளைஞர்கள் வேறுவழியில்லாமல் கடைசிபட்சமாகத் துறவு வாழ்க்கைக்கு வருகின்றனர்; சிலர், வாழ்க்கையில் எல்லா நம்பிக்கைகளையும் இழந்து துறவு வாழ்க்கைக்குத் தள்ளப்படுகின்றனர். ஒருவேளை அவர்கள் படிப்பதற்கும் பரீட்சைக்கும் பயந்தவர்களாக இருக்கலாம்; சரியாகப் படிக்காததால் அவர்கள் விரும்பும் வேலையைப் பெற முடியாதவர்களாக இருக்கலாம்! அல்லது வேறெதாவது விரக்தியாக இருக்கலாம்! இப்படிப்பட்டவர்கள் மடத்தில் சேர்வதைத்  தவிர்க்கவே படிப்பையும் வயது வரம்பையும் வைத்திருக்கிறோம்.

  1. கல்லூரி மாணவனாகிய நான் ராமகிருஷ்ண மடத்தில் சேரலாமா?
ஆரம்பித்த படிப்பை முடித்த பிறகு மடத்தில் சேர்வது நல்லது. மடத்தில் சேர்வதற்காக உங்களது படிப்பை பலிகடா ஆக்கிவிடாதீர்கள்! படிப்பை முடிக்கும் வரை நமது மடத்தின் ஏதாவது ஒரு கிளையில் உங்களது ஓய்வு நேரத்தில் சேவை புரியலாம்.
  1. மடத்தில் சேர்ந்த பிறகு எனது உயர் கல்வியைத் தொடர முடியுமா?
பொதுவாக, மடத்தில் சேர்வதற்கு முன்பே படிப்பை முடிந்திருக்க வேண்டும்.
  1. உடல் நலக் குறைவு இருந்தால் மடத்தில் சேர முடியுமா?
மடத்தில் சேர்வதற்கு நல்ல உடல் நலம் அவசியம். துறவிகள் மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும்; மற்றவர்களது சேவையை ஏற்பது சரியல்ல. எனவே, மடத்தில் சேரும்முன் முழு மருத்துவப் பரிசோதனை கட்டாயம். மனதளவிலும் உடலளவிலும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மடத்தில் சேர முடியாது. மிகவும் கடினமான துறவு வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது; அவர்கள் மற்றவர்களுக்குப் பாரமாகிவிடுவர்.
  1. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் நூல்களை நான் படித்ததில்லை; நான் மடத்தில் சேரலாமா?
உடனடியாகச் சேர வேண்டாம். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் சம்பந்தமான முக்கியமான சில நூல்களையாவது படியுங்கள்.
  1. வேதாந்தத்தை ஆழமாகப் படிக்க விருப்பம் உள்ளது. மடத்தில் சேர்ந்த பிறகு முடியுமா?
நிச்சயம். பகவத் கீதை, உபநிஷதங்கள் முதலிய வேதாந்த நூல்களைப் படிப்பதற்கு நமது மடத்தில் எல்லா வாய்ப்புகளும் உள்ளன. மடத்தில் சேர்ந்த மூன்று வருடங்களுக்குப் பிறகு எல்லா பிரம்மச்சாரிகளுக்கும் பேலூர் மடத்தின் பயிற்சி மையத்தில் (Training Centre) இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகின்றன. அங்கு வேதாந்தம் மற்றும் பல ஆன்மீக நூல்கள் கற்றுத் தரப்படும். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் மற்ற துறவிச் சீடர்களின் வாழ்க்கையும் அறிவுரைகளும் ஒருவிதத்தில் வேதாந்தமே! வேதாந்தம் கூறும் உண்மைகளை அவர்கள் தங்களது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். வேதாந்தத்தை வெறும் கல்வியாகக் கற்காமல், அவர்களைப் போன்று ஆழ்ந்த நம்பிக்கை பெறுவதற்கும் ஆன்ம அனுபூதி பெறுவதற்கும் வேதாந்தத்தைக் கற்க வேண்டும். அப்படிப்பட்ட வகையில் நமது மடத்தின் துறவிகளுக்கு வேதாந்தம் போதிக்கப்படுகிறது.
  1. நான் இந்து அல்ல; என்னால் மடத்தில் சேர முடியுமா?
ராமகிருஷ்ண மடம் எல்லா மதத்தினருக்குமானது; தங்களது மதம், இனம், தேசியம் எதுவாக இருந்தாலும்  மடத்தில் சேரலாம். ஆனால், ‘எல்லா மதங்களும் ஒரே இலக்கையே சென்றடைகின்றன’, ‘மனித சேவையே இறை சேவை’ முதலிய ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துக்களை ஏற்பதற்கும் தூய துறவு வாழ்க்கை வாழ்வதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
  1. நான் கிருஷ்ண பக்தன் (சிவ, காளி, ஏசு கிறிஸ்து அல்லது மற்ற தெய்வங்களின் பக்தன்); என்னால் மடத்தில் சேர முடியுமா?
அதனால் எந்த சிக்கலும் கிடையாது;  பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் மீது மதிப்பும் அவரது போதனைகளில் நம்பிக்கையும் இருந்தால் போதும்; மடத்தில் சேரலாம்.
  1. நமது நாட்டிற்கு, குறிப்பாக ஏழைகளுக்கும் உதவியற்றவர்களுக்கும் சேவை செய்ய மடத்தில் சேரலாமா?
சேரலாம்! ஆனால் சேவை என்றால் என்ன என்பதைப் பரந்த மனதுடன் உணர்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். வெறும் சமூக சேவை செய்வதற்காக ஏற்பட்ட மற்றுமொரு NGO அல்ல நமது மடம். ‘தனது சொந்த முக்திக்காகவும் உலக நன்மைக்காகவும்’ (ஆத்மனோ மோக்ஷார்த்தம் ஜகத் ஹிதாய ச) என்பதை நமது லட்சியமாக சுவாமி விவேகானந்தர் வைத்துள்ளார். ஆன்மீகமே நமது மடத்தின் அடிப்படை; அதுவே நம்மை வழிநடத்துகிறது; அதுவே லட்சியம். தாங்கள் செய்யும் சேவைப்பணிகளை ஆன்மீக சாதனையாகவே நமது துறவிகள் கருதுகின்றனர். எனவே, நமது மடத்தில் இருப்பதற்கு ஆன்மீகக் கண்ணோட்டம் அவசியம்; வெறும் கருணை கொண்ட உள்ளம் அல்லது நாட்டுப்பற்று மட்டும் போதாது.
  1. நான் துறவு வாழ்க்கை வாழ விரும்புகிறேன்; ஆனால் எனது பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள். என்ன செய்வது?
பெற்றோரின் சம்மதம் விரும்பத்தக்கதுதான்; ஆனால் அது கட்டாயமல்ல. மடத்தில் சேர விரும்பும் நீங்கள் உங்களது முடிவுகளை நீங்களே எடுக்கக்கூடிய பருவத்தை அடைந்தவர். தங்களது மகன் துறவி ஆவதற்கு அபூர்வமாகத்தான் பெற்றோர்கள் சம்மதிக்கிறார்கள். எனவே, பலரும் இந்த விஷயத்தில் பெற்றோர்களின் எதிர்ப்பையும் கோபத்தையும் சந்தித்தே ஆகவேண்டும். ஆனால், துறவு வாழ்க்கையை நீங்கள் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், உலகியல் இன்பங்களின் மீது உனக்குள்ள உண்மையான வைராக்கியமே, உலகப் பொறுப்புகளைத் தவிர்க்கும் எண்ணமல்ல என்று நீங்கள் உறுதியாக எண்ணினால், உங்களை யாராலும் தடுக்க முடியாது. அதே நேரம், பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு சில ஆண்டுகளில் தங்களது மகன் மடத்தில் சேர்ந்ததை ஏற்றுப் பெருமையும் கொள்கின்றனர். துறவு வாழ்க்கை என்பது இன்று நேற்று வந்ததல்ல; அது பண்டைய காலத்திலிருந்து தொன்றுதொட்டு வந்து கொண்டிருக்கிறது. சாஸ்திரங்களும் அதை அனுமதிக்கின்றன. ‘யதஹரேவ விரஜேத் ததஹரேவ ப்ரவ்ரஜேத்’ (வைராக்கியம் தோன்றிய அதே நாளில் துறவு மேற்கொள்) என்கிறது ஜாபாலோபநிஷதம். வீட்டிலிருந்து தீவிர எதிர்ப்பு ஏற்பட்டால் இதை எல்லாம் நினைத்துப் பார்க்கலாம்.
  1. மடத்தில் சேர்ந்த பிறகு பெற்றோருடனும் மற்ற உறவினர்களுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளலாமா?
தேவைப்பட்டால், ஆரம்ப நாட்களில் பெற்றோருடன் சற்றுத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம், அவர்களது நலனை விசாரிக்கலாம்.  ஆனால், படிப்படியாக ஒரு துறவி தனது பழைய எல்லாத் தொடர்புகளையும் கைவிட வேண்டும். ஒரே நாளில் யாராலும் அப்படி விட்டுவிட முடியாதுதான்! எனவே, உலகியல் தொடர்புகளை நீக்குவதன் மூலம் பற்றற்ற நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  1. என் பெயரில் சொத்து இருக்கிறது. மடத்தில் சேர்ந்துவிட்டால் என்ன ஆகும்?
துறவிக்குத் தனிச் சொத்து கூடாது. சாஸ்திரங்களும் சட்டமும் அதையே கூறுகின்றன. எனவே, உனது எல்லாச் சொத்துக்களையும் கூடிய விரைவில் ஏதோ ஒரு வகையில் உதறித் தள்ளிவிட வேண்டும். மடத்தில் சேர்வதற்கு முன்பு இதைச் செய்யாவிட்டால் சேர்ந்த பிறகாவது கூடிய விரைவில் செய்ய வேண்டும்.
  1. மடத்தில் எனக்கு சம்பளம் கிடைக்குமா?
துறவிகளுக்கு சம்பளம் கிடையாது; அது துறவு வாழ்க்கைக்கு எதிரானது. சம்பளத்தை எதிர்பார்த்து வேலை செய்வதல்ல துறவு வாழ்க்கை. எதையும் எதிர்பார்க்காமல் உனது உடல், -மனம், திறமை இவை எல்லாவற்றையும் மனமுவந்து முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்.
  1. நான் மடத்தில் சேர்ந்துவிட்டால் எனது தனிப்பட்ட தேவைகளை யார் கவனிப்பார்கள்? வயதாகிவிட்டால் யார் கவனித்துக் கொள்வார்கள்?
எல்லாவற்றிற்கும் கடவுளையே முழுமையாக நம்பி வாழ்வதுதான் துறவு வாழ்க்கை. இருந்தாலும் மடம் உங்களை எப்போதும் கவனித்துக் கொள்ளும். அதுபற்றிக் கவலை கொள்ள வேண்டாம்.
  1. மடத்தில் சேர்ந்த பிறகு எப்படிப்பட்ட உடை உடுத்த வேண்டும்?
மடத்தில் வேஷ்டியும், கழுத்துப்பட்டை இல்லாத சட்டையும், சட்டையின் மீது துண்டும்தான் எல்லோருக்கும் உடை. பிரம்மச்சாரிகள் உடையின் நிறம் வெள்ளை; சந்நியாசிகள் உடையின் நிறம் காவி.
  1. மடத்தில் சேர்ந்த பிறகு எவ்வளவு வருடங்கள் கழித்து துறவியாக முடியும்?
பொதுவாக ஒன்பது வருடங்கள் ஆகும். சந்நியாச தீட்சை பெறுவதற்குத் தன்னைத் தயார் செய்துகொள்ள இவ்வளவு காலம் கொடுக்கப்படுகிறது. தீட்சை பெற்ற பிறகு ‘சுவாமி’ பட்டமும் ‘ஆனந்த’ என்று முடியும் புதிய பெயரும் வழங்கப்படும்.
  1. மடத்தில் சேர்ந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?
மடத்தில் சேர்ந்த பிறகு, ‘தனது சொந்த முக்திக்காகவும் உலக நன்மைக்காகவும்’ (ஆத்மனோ மோக்ஷார்த்தம் ஜகத் ஹிதாய ச)என்ற இரண்டு லட்சியங்களை அடைவதற்கு உனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்க வேண்டும். அதாவது ஆன்மீக சாதனை மற்றும் தன்னலமற்ற சேவையில் உன்னை முற்றிலும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஜபம், தியானம், பிரார்த்தனை, வழிபாடு, பாராயணம் செய்தல், நாம சங்கீர்த்தனம், சாஸ்திரங்களைக் கற்றல் முதலியன ஆன்மீக சாதனைகள் ஆகும். இவற்றில் ஜபமும் தியானமும் மிகவும்  முக்கியமானவை, தினசரி செய்ய வேண்டியவை. சிலவற்றை தனியாகச் செய்ய வேண்டும், சிலவற்றை மற்ற துறவிகளுடன் சேர்ந்து செய்ய வேண்டும். இவற்றுடன் தன்னலமற்ற சேவை பணிகளிலும் மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபட வேண்டும்; அதன் மூலம் மடத்தின் பல்வேறு பணிகளில் உங்களது பங்கை அர்ப்பணிக்கலாம். மடத்திற்காகவோ அல்லது மக்களுக்காகவோ எந்த பணிகளைச் செய்தாலும் அவற்றை ஒரு வழிபாடாக செய்ய வேண்டும். அப்படிச் செய்வதால் அதுவே ஒரு வகையில் ஆன்மீக சாதனை ஆகிறது. உனது வாழ்நாளை இந்த விதமாகக் கழிப்பதன்மூலம் உன்னிடம் தூய்மை, பக்தி, பற்றின்மை, தன்னலமின்மை, சத்தியம், பிரம்மச்சரியம் முதலிய துறவிகளுக்கு இருக்க வேண்டிய பண்புகள் வளர்கின்றன; அதன்மூலம் நீ இறைவனை உணர்வாய்.
  1. ராமகிருஷ்ண சங்கத்தில் சாதனை முறை என்ன?
கர்மயோகம், பக்தியோகம், ராஜயோகம், ஞானயோகம் என்ற நான்கு யோகங்களின் ஓர் இணக்கமான கலவையை நமது  மடம் பின்பற்றுகிறது. அதன்மூலம் ஒருவன் முழு வளர்ச்சி பெறுகிறான். சென்ற கேள்வியின் பதிலில் கூறிய வாழ்க்கை முறையை திடமான நம்பிக்கையுடன் பின்பற்றும்போது இந்த நான்கு யோகங்களும் எளிதில் கைகூடும். நான்கு யோகங்களின் இணக்கமான கலவையை சங்கத்தின் சின்னத்திலேயே சுவாமி விவேகானந்தர் வடிவமைத்துள்ளார். அதன் விளக்கத்தை இங்கு (Emblem Link) காணலாம்.
  1. பிரம்மச்சரிய வாழ்க்கை என்றால் என்ன என்பது பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதுபற்றிப் படிப்பதற்கு ஏதாவது நூல்களோ அல்லது வழிகாட்டிகளோ இருந்தால் கூறவும்.
சுவாமி விவேகானந்தர் பலநேரங்களிலும் பிரம்மச்சரியத்தைப் பற்றிப் பேசியுள்ளார். அவற்றை எல்லாம் தொகுத்து இங்கு (link of Swamiji’s Quotes on Celibacy) கொடுத்துள்ளோம். அத்துடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நூல்களும் மிகவும் உதவியாக இருக்கும். சுவாமி ஸ்ரீகாந்தானந்தர் எழுதிய Youth! Arise Awake and Know your Strength என்ற நூலில் உள்ள Strength of Brahmacharya என்னும் அத்யாயம். சுவாமி அசோகானந்தர் எழுதிய Spiritual Practice என்னும் நூலில் உள்ள Brahmacharya என்னும் அத்யாயம்.
  1. மடத்தில் சேர்ந்த பிறகு எனக்கு வழிகாட்ட யாராவது ஆன்மீக குரு கிடைப்பாரா?
மடத்திலுள்ள மூத்த துறவிகளை அணுகினால் அவர்கள் உனது ஆன்மீக வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் வழிகாட்டுவர். நீ சரியான பாதையில் முன்னேறுவதை அவர்கள் கவனிப்பர்.
  1. இதுவரை நான் மந்திர தீட்சை பெறவில்லை. என்ன செய்வது?
மந்திர தீட்சை என்பது ஒரு புனித நிகழ்ச்சி. அப்போது ஆன்மீக சாதகனுக்கு மந்திரத்தை குரு உபதேசிக்கிறார். அந்த மந்திரத்தை ஜபம் செய்யும் முறையையும், தியானம் செய்யும் முறையையும் அவர் கற்றுக் கொடுப்பார். நமது சங்கத்தில் தலைவர் மற்றும் உபதலைவர்  சுவாமிஜிகள் மட்டுமே தீட்சை வழங்குவர். அவர்களிடம் நீ ஏற்கனவே தீட்சை பெற்றிருக்காவிட்டால், மடத்தில் சேர்ந்த சில நாட்களில் தீட்சை பெற்றுக் கொள்ளலாம்.
  1. மடத்தில் எந்தக் கிளையிலும் சேரலாமா?
ஒரு சில கிளைகளைத் தவிர, பிரம்மச்சாரிகள் எந்தக் கிளையிலும் சேரலாம். வெளிநாடுகளிலுள்ள கிளைகளிலும் சேரலாம். பேலூர் மடத்திலும் சேரலாம். புதியதாகச் சேர்பவர்களுக்கு பேலூர் மடத்தில் Pre–Probationers’ Training Centre (PPTC) இருக்கிறது. எந்தக் கிளையில் சேர்ந்தாலும் பேலூர் மடத்தில் இரண்டு வருடங்கள் பயிற்சி மையத்தில் (TC) தங்கிப் பயிற்சி பெற வேண்டும்.
  1. பேலூர் மடத்தில் சேர்வதில் என்ன சிறப்பு உள்ளது?
ராமகிருஷ்ண சங்கத்தின் இதயம் போன்றது பேலூர் மடம். அதுதான் நமது மடத்தின் தலைமையகம். அங்கு சுவாமி விவேகானந்தரும், ஸ்ரீராமகிருஷ்ணரின் மற்ற சில நேரடிச் சீடர்களும் வாழ்ந்தனர். அவர்களது புனிதமான தொடர்புகள் இருப்பதால் பலரும் தங்களது துறவு வாழ்க்கையை அங்கிருந்து தொடங்க விரும்புகின்றனர். புதியதாக மடத்தில் சேர்பவர்கள் பொதுவாக ஆறு முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை PPTC–யில் இருப்பர். பின்னர் அவர்கள் மடத்தின் எந்தக் கிளைக்கும் அனுப்பப்படுவர்.
  1. எனது வீட்டின் அருகில் ராமகிருஷ்ண ஆசிரமம் உள்ளது. அங்கு நான் சேரலாமா?
‘ஸ்ரீராமகிருஷ்ணர்’, ‘சுவாமி விவேகானந்தர்’ ஆகியோரின் பெயர்களைத் தாங்கி இருக்கும் எல்லா ஆசிரமங்களும் எங்களது அதிகாரப்பூர்வ கிளைகள் கிடையாது. எனவே, சேர்வதற்கு முன் உனது வீட்டருகில் இருக்கும் ஆசிரமம் எங்களது அதிகாரப்பூர்வ கிளைதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள். எங்களது அதிகாரப்பூர்வ கிளைகளை எங்களது இணையதளத்தில் <belurmath.org> காணலாம்.
  1. மடத்தின் ஒரு குறிப்பிட்ட கிளை எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்நாள் முழுதும் அந்தக் கிளையிலேயே துறவியாக இருக்க முடியுமா?
மடத்தின் உனக்குப் பிடித்த கிளையில் நீ சேரலாம்; அங்கே முதல் மூன்று வருடங்கள் வரை இருக்கலாம். அதன் பிறகு பேலூர் மடத்தின் மூத்த துறவிகள் உன்னை மடத்தின் எந்த கிளைக்கும் அனுப்புவர். அதற்கு நீ தயாராக இருக்க வேண்டும். ஒரே கிளையில் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்று எண்ணுவது துறவு வாழ்க்கைக்கு எதிரானது. மடத்தின் உனக்குப் பிடித்த கிளையில் நீ சேரலாம்; அங்கே முதல் மூன்று வருடங்கள் வரை இருக்கலாம். அதன் பிறகு பேலூர் மடத்தின் மூத்த துறவிகள் உன்னை மடத்தின் எந்த கிளைக்கும் அனுப்புவர். அதற்கு நீ தயாராக இருக்க வேண்டும்.
  1. வெளிநாடுகளில் ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துகளைப் பரப்ப எனக்கு வாய்ப்பு கிடைக்குமா?
வாய்ப்பு கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். பல காரணிகளையும் ஆராய்ந்த பிறகு, யாரை வெளி நாடுகளுக்கு அனுப்புவது என்பதை மடத்தின் தலைமையகமே முடிவு செய்யும். விருப்பு வெறுப்புகளைத் துறந்து, குருதேவரை மட்டுமே சார்ந்து வாழும் மனதுடன் மடத்தில் சேர்வதே மிகவும் நல்லது.
  1. பொதுவாக துறவு வாழ்க்கை பற்றியும், குறிப்பாக ராமகிருஷ்ண மடத்தைப் பற்றியும் விரிவாக அறிய ஏதாவது புத்தகம் உள்ளதா?
10-–வது கேள்வியின் பதிலில் கூறப்பட்ட நூல்களைப் படிப்பது போதுமானது. அவற்றுடன் பின்வரும் நூல்களையும் படிக்கலாம். சுவாமி பஜனானந்தர் எழுதிய- The Glory of Monastic Life. வேதாந்த கேசரி வெளியிட்ட சிறப்பு நூல்: -Monasticism – Ideal and Traditions.
  1. சேர்ந்த பிறகு மடத்தில் தொடர முடியாவிட்டால் மடத்திலிருந்து வெளியேறலாமா?
எப்போது விரும்பினாலும் மடத்திலிருந்து வெளியேறலாம். துறவு வாழ்க்கைக்கு மக்கள் தங்களது விருப்பத்தின் பெயரிலேயே வருகின்றனர்; எனவே தங்களது விருப்பத்தின் பெயரிலேயே வெளியேறவும் செய்யலாம். எந்தச் சட்ட சிக்கலும் கிடையாது; மடமும் சரி, வெளியேறுபவர்களும் சரி யாரும் யாருக்கும் பணவிஷயத்திலோ அல்லது வேறு வகையிலோ கடமைப்பட்டவர்கள் கிடையாது. மடத்தை  விட்டு வெளியேறுவதால் உனது ஆன்மீகப் பயணம் முடிவடைந்துவிடும் என்பது கிடையாது. உனது ஆன்மீக சாதனைகளை எங்கிருந்தாலும் தொடரலாம்.
  1. நன்றி, எனது எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது. இருந்தாலும், மடத்தில் சேர்வதா அல்லது குடும்பத்தில் சாதாரண வாழ்க்கை வாழ்வதா என்று இன்னும் தெளிவு பிறக்கவில்லை. அதற்கு உங்களால் உதவ முடியுமா?
இதுபற்றி நீதான் முடிவு செய்ய வேண்டும். உண்மையில் நீ எது விரும்புகிறாய் என்பதை அறிந்து கொள்ள உனது மனதை கவனத்துடன் ஆராய்ச்சி செய். உனது மனதைத் திடமாகவும் வலிமையாகவும் ஆக்குவதற்கு இறைவனிடம் மன ஏக்கத்துடன் பிரார்த்தனை செய். அறிவார்ந்த பெரியோர்களிடம் நீ அறிவுரை கேட்கலாம்; ஆனால் இதற்கான இறுதி முடிவு உங்களுக்குள்ளிருந்தே வர வேண்டும். ***

Read in  English  | हिंदी  |   বাংলা  | தமிழ்  |  മലയാളം  |  ଓଡ଼ିଆ  |  ગુજરાતી  |  मराठी  |  ಕನ್ನಡ  |  অসমীয়া  

  రామకృష్ణ సంఘంలో చేరడం గురించి తరచుగా అడిగే ప్రశ్నలు శ్రీరామకృష్ణ పరమహంస మరియు స్వామి వివేకానందల స్ఫూర్తిదాయకమైన జీవితాలను, సందేశాలను చదివి చాలా మంది యువత ప్రేరణ పొందుతున్నారు. వారు రామకృష్ణ సంఘంలో చేరి, సన్న్యాస జీవితం గడపాలని అభిలషిస్తున్నారు. మరి కొంతమంది యువత, యూట్యూబ్‌ వంటి సామాజిక మాధ్యమాలలో వేదాంతం గురించిన ఉత్తేజపూర్వక ఉపన్యాసాలు వినడం ద్వారా ప్రేరణ పొంది, సన్న్యసించాలని కోరుకుంటున్నారు. లౌకిక విజయాల పట్ల, ఈ ప్రపంచంలోని సంబంధ బాంధవ్యాల పట్ల విరక్తి కూడా కొంతమందిని మఠం వైపు నడిపిస్తోంది. మరికొందరైతే, రామకృష్ణ సంఘ సన్న్యాసులు నిస్వార్ధంగా చేస్తున్న సేవా కార్యక్రమాలకు ప్రభావితులై, తాము కూడా అందుకు అంకితమవ్వాలని కోరుకుంటున్నారు. ప్రేరణ ఏదైనా సరే, రామకృష్ణ సంఘంలో సన్న్యాస జీవితం గడపాలనుకునేవారు ముందుగా కొన్ని విషయాలను జాగ్రత్తగా ఆలోచించాలి. అలాంటి ఉదాత్తమైన ఆశయం కలవారు సరైన అవగాహనతో నిర్ణయం తీసుకోవాలి. ఆ వివరాలన్నీ ప్రశ్నలు-సమాధానాల రూపంలో సంక్షిప్తంగా ఈ క్రింద వివరించబడ్డాయి.  
  1. రామకృష్ణ సంఘం అంటే ఏమిటి?
ఇక్కడ సంఘం అంటే, ఒకే లక్ష్యానికి కట్టుబడిన సన్యాసులు ఒక సమూహంగా జీవించడం! రామకృష్ణ సంఘం అనేది వ్యవస్థీకరించబడిన ఒక సన్న్యాసుల సంస్థ. దీనికి ఆదిమూలం శ్రీరామకృష్ణులు మరియు ఆయన ప్రత్యక్ష సన్న్యాస శిష్యులు, ముఖ్యంగా స్వామి వివేకానంద! ఈ సందర్భంలో శ్రీ శారదాదేవిని గురించి తప్పక ప్రస్తావించాలి. ఆమె ఆధ్యాత్మికోన్నతి శ్రీరామకృష్ణుల ఆధ్యాత్మికోన్నతికి సమానమైనది. రామకృష్ణ సంఘం ఆవిర్భవించినప్పటి నుండి సుమారు మూడు దశాబ్దాల పాటు, ఆమె తన మాతృప్రేమతోనూ, ఆధ్యాత్మిక ఉపదేశంతోనూ ఈ సంఘానికి మార్గదర్శనం చేశారు. అందుచేత, ఆమెను ‘రామకృష్ణ సంఘ దివ్యజనని’గా పేర్కొంటారు. కార్యాచరణ పరంగా, రామకృష్ణ సంఘం అనేది “రామకృష్ణ మఠం” మరియు “రామకృష్ణ మిషన్‌” అని ప్రత్యేకంగా రిజిస్టర్‌ చేయబడిన రెండు సంస్థలు. వీటి ప్రధాన కార్యాలయాలు పశ్చిమ బెంగాల్‌లోని బేలూరు మఠంలో ఉన్నాయి. ఈ సంఘానికి ప్రపంచవ్యాప్తంగా 200కు పైగా శాఖలున్నాయి. ఈ  రె౦డు సంస్థల చరిత్ర, ఆశయం, మరియు కార్యకలాపాల గురించి మరింత తెలుసుకోవడానికి మా వెబ్‌సైట్‌ను సందర్శించగలరు.  
  1. ‘రామకృష్ణ సంఘంలో చేరడం’ అంటే ఏమిటి?
రామకృష్ణ సంఘంలో చేరడం అంటే, కుటుంబాన్ని, స్నేహితులను, వృత్తిని, సంపదను, అన్ని లౌకిక ఆసక్తులను, సుఖాలను మరియు సంబంధాలను త్యజించి సన్న్యాస జీవితాన్ని స్వీకరించడం! ఆ వ్యక్తి ఇకపై రామకృష్ణ సంఘానికి చెందిన ఏదైనా మఠం లేదా ఆశ్రమంలో నివసిస్తూ, తన జీవితాన్ని ఆధ్యాత్మిక అన్వేషణకు మరియు నిస్వార్థ సేవకు అంకితం చేస్తాడు.  
  1. రామకృష్ణ సంఘంలో సన్న్యాసి కావడానికి అర్హతలు ఏమిటి?
ఆసక్తి గల యువకులు (గమనిక: కేవలం పురుషులకు మాత్రమే) కనీసం గ్రాడ్యుయేషన్‌ పూర్తి చేసి, వయస్సు 18 నుంచి 28 ఏళ్ల మధ్య ఉండాలి. ఇంజినీరింగ్‌ లేదా వైద్య విభాగాలలో గ్రాడ్యుయేషన్/పోస్ట్‌-గ్రాడ్యుయేషన్ చేసినవారికి గరిష్ఠ వయస్సు 30 సంవత్సరాలు. పాశ్చాత్యులకు గరిష్ఠ వయస్సు 36 సంవత్సరాలు. మరిన్ని వివరాల కోసం, దయచేసి బేలూరు మఠంలోని ప్రధాన కార్యాలయాన్ని  ఈ-మెయిల్ mail@rkmm.org ద్వారా సంప్రదించగలరు.  
  1. సన్న్యాస జీవితాన్ని స్వీకరించాలనుకునే యువతులకు గల అవకాశాలు ఏమిటి?
రామకృష్ణ సంఘం కేవలం సన్న్యాసులకు (పురుషులకు) మాత్రమే ఉద్దేశించినది. అయితే, మహిళల కోసం, రామకృష్ణ సంఘం తరహా ఆశయాలను అనుసరించే స్వతంత్ర సంస్థ ఒకటి ఉంది. అదే ‘శ్రీ శారదా మఠం.’ సన్న్యాస జీవితంపై ఆసక్తి గల యువతులు కోల్‌కతాలోని దక్షిణేశ్వరంలో గల ‘శ్రీ శారదా మఠం’ ప్రధాన కార్యాలయాన్ని నేరుగా సంప్రదించవచ్చు. ఈ-మెయిల్ saradamath.office@gmail.com  
  1. నాకు వివాహమైంది. నేను రామకృష్ణ సంఘంలో చేరవచ్చా?
క్షమించండి! రామకృష్ణ సంఘంలో చేరడానికి వివాహం కాని పురుషులు మాత్రమే అర్హులు. వివాహమై విడాకులు తీసుకున్నవారు కూడా అర్హులు కారు. అయితే, ఒక భక్తునిగానో, స్వచ్ఛంద సేవకునిగానో మాతో (మఠం లేదా మిషన్‌తో) అనుబంధం ఏర్పరచుకోవడానికి మీకు స్వాగతం. దీనికి సంబంధించి మరింత సమాచారం కోసం, మీ దగ్గరలోని మా శాఖా కేంద్ర అధ్యక్షులు / కార్యదర్శిని సంప్రదించగలరు.  
  1. అన్నింటినీ త్యజించాలనుకున్న వ్యక్తికి విద్యార్హత ఎందుకు?
ఆధ్యాత్మిక పురోగతికి విద్యార్హత తప్పనిసరి కానప్పటికీ, ఈ క్రింది కారణాల వల్ల అది అవసరం. అ) సన్న్యాస జీవితాన్ని ఎంచుకోవడం అనేది జీవితంలో అత్యంత కీలకమైన నిర్ణయం. ఈ నిర్ణయం తీసుకోవాలంటే ఒక నిర్దిష్ట స్థాయి మానసిక పరిపక్వత అవసరం. ఇతరత్రా అంశాలతో పాటు, లౌకిక విద్య ఈ పరిణతిని పొందేందుకు కూడా సహాయపడుతుంది. ఆ) రామకృష్ణ సంఘ సన్న్యాసులు పాఠశాలలు, కళాశాలలు, ఆసుపత్రులు వంటి అనేక సేవాసంస్థలను నిర్వహించాల్సి ఉంటుంది. అలాగే, వారు జాతీయ లేదా అంతర్జాతీయ వేదికలు, విశ్వవిద్యాలయాలలో ప్రసంగించేందుకు  ఆహ్వానించబడతారు. ఈ బాధ్యతలను సమర్థవంతంగా నిర్వహించడానికి మంచి విద్యార్హత సహాయపడుతుంది. ఇ) కొందరు యువకులు లౌకిక వైఫల్యాల కారణంగా సన్న్యాస జీవితాన్ని ఎంచుకుంటుంటారు. బహుశా వారు చదువులకు, పరీక్షలకు భయపడి కావచ్చు, లేదా చదువులో ప్రతిభ లేని కారణంగా కోరుకున్న ఉద్యోగం రాకపోవటం వల్ల కావచ్చు. కాబట్టి విద్యార్హత మరియు వయోపరిమితిని నియమంగా చేసి, అటువంటివారు రామకృష్ణ సంఘంలోకి ప్రవేశించకుండా నిరోధించడమే మా ఉద్దేశం.  
  1. నేను కళాశాల/విశ్వవిద్యాలయ విద్యార్థిని. నేను ఇప్పుడే రామకృష్ణ సంఘంలో చేరవచ్చా?
మీరు మొదలుపెట్టిన కోర్సును లేదా డిగ్రీని తప్పనిసరిగా పూర్తి చేయండి. ఆ తరువాత మీరు సంఘంలో చేరవచ్చు. మీ వైరాగ్యానికి మీ చదువును మొదటి బలి కానివ్వకండి. మీ చదువు పూర్తయ్యే వరకు, తీరిక సమయాలలో మీకు దగ్గరలోని మా మఠ/మిషన్‌ శాఖలో వాలంటీర్‌గా స్వచ్ఛంద సేవలో పాల్గొనవచ్చు.  
  1. రామకృష్ణ సంఘంలో చేరిన తర్వాత నేను ఉన్నత చదువులు కొనసాగించడానికి అవకాశం ఉందా?
సాధారణంగా, మఠంలో చేరదలచుకున్నవారు ముందుగానే తమ విద్యను పూర్తి చేసి ఉండాలి.  
  1. నాకు కొన్ని ఆరోగ్య సమస్యలు ఉన్నాయి. నేను రామకృష్ణ సంఘంలో చేరడానికి అవి ప్రతిబంధకమా?
సన్న్యాసి ఇతరులను సేవించాలి గానీ తాను సేవలు చేయించుకోకూడదు కాబట్టి, రామకృష్ణ సంఘంలో చేరడానికి మంచి ఆరోగ్యం చాలా అవసరం. అందువల్ల, సంఘంలో చేరే ప్రక్రియలో భాగంగా, అభ్యర్థులు తమ శారీరక సామర్థ్యాన్ని నిరూపించుకోవడానికి తప్పనిసరిగా వైద్య పరీక్షలు చేయించుకోవాలి. దీర్ఘకాలిక లేదా తీవ్రమైన శారీరక, మానసిక అనారోగ్యాలు ఉన్నవారిని సంఘంలో చేర్చుకోరు. ఎందుకంటే, వారు సన్న్యాస జీవితంలోని కష్టాలను భరించలేక, సంఘానికి భారంగా మారే అవకాశం ఉంటుంది.  
  1. నేను శ్రీరామకృష్ణులు, స్వామి వివేకానందల గురించిన సాహిత్యాన్ని చదవలేదు. మరి సంఘంలో చేరవచ్చా?
అలాంటప్పుడు మీరు వెంటనే రామకృష్ణ సంఘంలో చేరడం సముచితం కాదు. దయచేసి ముందుగా రామకృష్ణ - వివేకానంద సాహిత్యానికి సంబంధించిన కొన్ని ముఖ్యమైన పుస్తకాలను చదవడానికి తగినంత సమయాన్ని వెచ్చించండి.  
  1. నేను వేదాంతాన్ని లోతుగా అధ్యయనం చేయాలనుకుంటున్నాను. సంఘంలో చేరిన తర్వాత అది నాకు సాధ్యమవుతుందా?
సాధ్యమవుతుంది. భగవద్గీత, ఉపనిషత్తులు వంటి వేదాంత గ్రంథాలను అధ్యయనం చేయడానికి రామకృష్ణ సంఘంలో అనేక అవకాశాలు ఉన్నాయి. సంఘంలో చేరిన మూడు సంవత్సరాల తర్వాత ప్రతి బ్రహ్మచారి, బేలూరు మఠంలోని బ్రహ్మచారుల ప్రశిక్షణ కేంద్రం (ప్రొబేషనర్స్‌ ట్రైనింగ్‌ సెంటర్‌)లో రెండు సంవత్సరాల విస్తృతమైన అధ్యయన కార్యక్రమాన్ని తప్పనిసరిగా పూర్తి చేయాలి. అక్కడ వేదాంతంతో పాటు అనేక ధర్మశాస్త్రక విషయాలు బోధించబడతాయి. శ్రీరామకృష్ణులు, శ్రీ శారదాదేవి, స్వామి వివేకానంద మరియు శ్రీరామకృష్ణుల ఇతర ప్రత్యక్ష సన్న్యాస శిష్యుల జీవితాలు, బోధనలు స్వయంగా వేదాంతమే! ఎందుకంటే, వారు వేదాంత సత్యాలను తమ జీవితాలలో సాక్షాత్కరించుకొని, వాటికి నిలువెత్తు నిదర్శనంగా నిలిచారు. అందువల్ల, మా సన్న్యాసులు కేవలం పాండిత్యం కోసం కాకుండా, వేదాంత సత్యాలపై దృఢవిశ్వాసం మరియు ఆ సత్యాలను సాక్షాత్కరించుకోవడమే లక్ష్యంగా శాస్త్రాధ్యయనం చేయాలని చెబుతాం. అందుకు తగిన విధంగా, బ్రహ్మచారుల ప్రశిక్షణ కేంద్రంలోనూ, రామకృష్ణ సంఘం మొత్తంలో కూడా సన్న్యాసుల ఆధ్యాత్మిక అభివృద్ధికి అత్యంత ప్రాధాన్యతనిచ్చే విధంగా జీవన శైలి రూపొందించబడింది.  
  1. నేను జన్మతః హిందువును కాను. అయినా రామకృష్ణ సంఘంలో చేరవచ్చా?
అది ఏ మాత్రం సమస్యకాదు. రామకృష్ణ సంఘం అన్ని మతాలు, అన్ని జాతీయతలు మరియు సమస్త జాతుల ప్రజలకు స్వాగతం పలుకుతుంది. అయితే, వారు త్యాగ భావనతో పవిత్రమైన జీవితాన్ని గడపడానికి సంసిద్ధంగా ఉండాలి. శ్రీరామకృష్ణుల ఆదర్శాలలో  ప్రధానంగా, ‘అన్ని మతాలు ఒకే పరమ లక్ష్యానికి దారి తీస్తాయి మరియు మానవ సేవయే మాధవ సేవ’ అన్న ఆదర్శాలను మనస్ఫూర్తిగా స్వీకరించాలి.  
  1. నేను కృష్ణ (లేదా శివ, కాళి, క్రీస్తు లేదా ఇతర దైవం) భక్తుడిని. నేను రామకృష్ణ సంఘంలో చేరవచ్చా?
మీకు స్వాగతం! మీకు శ్రీరామకృష్ణుల పట్ల గౌరవభావం మరియు ఆయన బోధనలలోని సత్యాల పట్ల విశ్వాసం ఉంటే, తప్పకుండా సంఘంలో చేరవచ్చు.  
  1. నేను నా దేశానికి, ముఖ్యంగా నిరుపేదలకు మరియు నిస్సహాయులకు సేవ చేయడానికి రామకృష్ణ సంఘంలో చేరవచ్చా?
మీ సేవాదృక్పథాన్ని మరింత విశాలం చేసుకోవాలనుకుంటున్నట్లయితే తప్పకుండా చేరవచ్చు. ఇతర స్వచ్ఛంద సంస్థల (ఎన్ జి ఓస్) లాగా  రామకృష్ణ సంఘం కేవలం సామాజిక సేవ చేసే సంస్థ కాదు. మా నినాదం “ఆత్మనో మోక్షార్ధం జగత్‌ హితాయ చ” (స్వీయ ముక్తి మరియు లోక హితం కొరకు). దీనిని స్వామి వివేకానంద స్వయంగా ఇచ్చారు. ఆధ్యాత్మికతయే ఈ సంఘానికి ఆధారం, మార్గనిర్దేశిక శక్తి మరియు అంతిమ లక్ష్యం. మా సన్న్యాసులు సేవా కార్యక్రమాలను తమ ఆధ్యాత్మిక సాధనలో ఒక భాగంగా పరిగణిస్తారు. కాబట్టి, కేవలం దయగల హృదయం లేదా దేశభక్తి మాత్రమే కాకుండా, సంఘంలో కొనసాగడానికి ఈ ఆధ్యాత్మిక దృక్పథం అనివార్యం.  
  1. నేను సన్న్యాస జీవితాన్ని స్వీకరించాలనుకుంటున్నాను. కానీ, మా తల్లిదండ్రులు వ్యతిరేకిస్తున్నారు. నేనేం చేయాలి?
సంఘంలో చేరడానికి తల్లిదండ్రుల సమ్మతి పొందడం అత్యంత అవసరమైనప్పటికీ, మీరు యుక్తవయస్సువారే కాబట్టి ఇది తప్పనిసరి కాదు. చాలా అరుదుగా మాత్రమే తల్లిదండ్రులు తమ కుమారుడు సన్న్యాస జీవితం స్వీకరించడాన్ని ప్రోత్సహిస్తారు. అభ్యర్థులు చాలామంది తమ తల్లిదండ్రుల వ్యతిరేకతను, కొన్నిసార్లు వారి తీవ్ర కోపాన్నీ ఎదుర్కోవలసి వస్తుంది. అయితే, మీరు ఏవిధమైన బాధ్యతను తప్పించుకొనేందుకు కాకుండా, లౌకిక సుఖాల పట్ల నిజమైన విముఖతతోనే ఈ జీవితాన్ని ఎంచుకుంటున్నారన్న నిశ్చయంతో ఉంటే, ఏదీ మిమ్మల్ని నిలువరించలేదు. పైగా, కొంతకాలం తరువాత చాలామంది తల్లిదండ్రులు తమ కుమారుడి ఉన్నత నిర్ణయానికి హర్షించి, గర్వపడతారనేది కూడా వాస్తవం. సన్న్యాసం అనేది ప్రాచీనమైన, ఉన్నతమైన వ్యవస్థ. దీనికి శాస్త్రాల ఆధారం ఉంది. కాబట్టి సన్న్యసించాలనే  అభిలాష ఉన్నవారు ప్రతికూల పరిస్థితుల మధ్య ధైర్యంగా ఉండాలి. “యదహరేవ విరజేత్‌ తదహరేవ ప్రవ్రజేత్‌ - ఎప్పుడైతే వైరాగ్యం కలుగుతుందో, అప్పుడే ప్రపంచాన్ని త్యజించాలి” అని జాబాలోపనిషత్తు చెబుతోంది.  
  1. సంఘంలో చేరిన తర్వాత కూడా నేను మా తల్లిదండ్రులు, బంధువులతో సంబంధాలు కొనసాగించవచ్చా?
ప్రారంభ దశలో, అవసరమైతే తల్లిదండ్రులతో మాట్లాడటానికి, వారి యోగక్షేమాలు తెలుసుకోవడానికి అనుమతి ఉంటుంది. అయితే, సన్న్యాసులు తమ పూర్వపు సంబంధాలను తప్పనిసరిగా వదిలివేయాలి. ఇది తక్షణమే అందరికీ సాధ్యమయ్యే విషయం కాదు. కాబట్టి, లౌకిక సంబంధాలన్నింటినీ క్రమేణా దూరం చేసుకోవడం ద్వారా వైరాగ్య భావనను పెంపొందించుకోవాలి.  
  1. నా పేరున కొంత ఆస్తి ఉంది. నేను రామకృష్ణ సంఘంలో చేరితే దాని పరిస్థితి ఏమిటి?
సన్న్యాసి అంటేనే ఏమీ లేనివాడని అర్థం. ఈ విషయంలో శాస్త్రాలు మరియు చట్టపరమైన నిర్వచనాలు రెండూ ఏకాభిప్రాయంతో ఉన్నాయి. మీరు రామకృష్ణ సంఘంలో చేరడానికి మునుపు లేదా చేరిన తరువాత వీలైనంత త్వరగా మీ పేరున ఉన్న స్థిర చరాస్తులు అన్నింటినీ, మీ అభిమతం మేరకు విక్రయించి సర్దుబాటు చేయాలి.  
  1. రామకృష్ణ సంఘంలో నాకు జీతం చెల్లిస్తారా?
లేదు. సన్న్యాస ధర్మానికి అది విరుద్ధం కాబట్టి, రామకృష్ణ సంఘంలో సన్న్యాసులకు జీతం చెల్లించబడదు. సన్న్యాస జీవితం అనేది భౌతిక లాభాన్ని ఆశించి చేసే ఉద్యోగం కాదు. ఇక్కడ మీ శరీరాన్ని, మనస్సును, ప్రతిభను మరియు సామర్థ్యాలను ఎలాంటి భౌతిక ప్రతిఫలం ఆశించకుండా పూర్తి స్వచ్ఛందంగా సమర్పిస్తారు.  
  1. సంఘంలో చేరితే, నా వ్యక్తిగత అవసరాలను ఎవరు తీరుస్తారు? వృద్ధాప్యంలో నన్నెవరు చూసుకుంటారు?
సన్న్యాస జీవితాన్ని స్వీకరించడం అంటే, ప్రతి విషయంలోనూ సంపూర్ణంగా భగవంతుడిపై ఆధారపడటం! అయినా, ఈ విషయంలో మీరు ఎలాంటి ఆందోళన చెందాల్సిన అవసరం లేదు. సంఘం మీ సంరక్షణ చేపట్టి, మీకు అన్ని విధాలా సహాయపడుతుంది.  
  1. రామకృష్ణ సంఘంలో చేరిన తర్వాత నేను ఏ విధమైన దుస్తులను ధరించాలి?
సంఘంలోని సభ్యులు సాధారణంగా కుర్తా (కాలర్‌ లేని వదులుగా ఉండే చొక్కా), ధోవతీ (నడుము చుట్టూ కట్టి, పాదాల వరకు ఉండే వస్త్రం), మరియు ఉత్తరీయం (చొక్కా చుట్టూ కప్పుకొనే వస్త్రం) ధరిస్తారు. ఈ పద్ధతిని అనుసరించి, ప్రారంభ దశలో ఉన్న బ్రహ్మచారులు తెలుపు రంగు దుస్తులను, సన్న్యాస దీక్ష అయినవారు కాషాయ రంగు దుస్తులను ధరిస్తారు.  
  1. నేను రేపు సంఘంలో చేరితే, పూర్తి స్థాయి సన్న్యాసిగా మారడానికి ఎంత కాలం పడుతుంది?
సాధారణంగా తొమ్మిది సంవత్సరాలు పడుతుంది. ఒక అభ్యర్థి తనను తుది సన్న్యాస దీక్షకు సమాయత్తం చేసుకోవడానికి కేటాయించబడిన సమయం ఇది. సన్న్యాసం స్వీకరించిన తరువాత పేరు చివరలో ‘ఆనంద’ అని, పేరు మొదట్లో ‘స్వామి’ అని ఇవ్వబడుతుంది.  
  1. రామకృష్ణ సంఘంలో చేరిన తరువాత నేను అనుసరించాల్సిన విధానం ఏమిటి?
రామకృష్ణ సంఘంలో చేరిన తరువాత, మీ పూర్తి జీవితాన్ని “ఆత్మనో మోక్షార్ధం జగత్‌ హితాయ చ – స్వీయ ముక్తి మరియు లోక హితం కొరకు”  అనే రెండు ఆదర్శాలకు అంకితం చేయాలి. ఆజన్మాంతం, మీరు ఆధ్యాత్మిక సాధనలలో మరియు నిష్కామ సేవలో నిమగ్నమై ఉండాలి. ఆధ్యాత్మిక సాధనలు అంటే... జపం, ధ్యానం, ప్రార్థన, పూజ, స్తోత్ర పారాయణం, భజనలు పాడటం, పవిత్ర గ్రంథాల అధ్యయనం మరియు ఇతర ఆధ్యాత్మిక సాధనలు ఆచరించడం. ఇందులో, రోజువారీ జపం మరియు ధ్యానం అత్యంత ముఖ్యమైనవి. వీటిలో కొన్ని సాధనలను స్వయంగా, మరికొన్నింటిని ఆశ్రమంలోని సోదర సన్న్యాసులతో కలిసి చేయాలి. మీరు ఈ సాధనలతోపాటు, అంతే ఉత్సాహంతో మరియు నిజాయితీతో నిస్వార్థ సేవలో కూడా పాల్గొంటారు. తద్ద్వారా మా సంస్థ యొక్క సేవా కార్యక్రమాలలో మీ వంతు పాత్ర పోషిస్తారు. మీరు మఠం కోసం లేదా ప్రజల కోసం చేసే ఏ పనైనా పూజ్యభావంతో చేయాలి. అప్పుడు మీకు అది కూడా ఒక  ఆధ్యాత్మిక సాధన అవుతుంది. మీరు ఈ విధంగా జీవితాన్ని గడపడం ద్వారా, పవిత్రత, భక్తి, వైరాగ్యం, నిస్వార్థత, సత్యసంధత మరియు బ్రహ్మచర్యం వంటి సాధు లక్షణాలను సంతరించుకొని భగవత్‌ సాక్షాత్కారం పొందుతారు.  
  1. రామకృష్ణ సంఘంలో అనుసరించే ఆధ్యాత్మిక సాధన ఏమిటి?
ఇక్కడ కర్మయోగం, భక్తియోగం, రాజయోగం మరియు జ్ఞానయోగం అనే నాలుగు యోగాల సమన్వయాన్ని అనుసరిస్తారు. ఈ విధానం వల్ల సర్వతోముఖ వ్యక్తిత్వ వికాసం సాధ్యపడుతుంది. నిజానికి, ఎవరైనా ఈ సంఘంలోని జీవన విధానాన్ని (మునుపటి ప్రశ్నకు సమాధానంలో వివరించిన విధంగా) అచంచలమైన విశ్వాసం మరియు గౌరవంతో అనుసరిస్తే, వారిలో ఈ నాలుగు యోగాల సమన్వయం సహజంగానే జరుగుతుంది. స్వామి వివేకానంద రూపొందించిన రామకృష్ణ సంఘ చిహ్నంలో ఈ నాలుగు యోగాల సమన్వయం అద్భుతంగా చిత్రీకరించబడింది. మా చిహ్నం గురించి ఇక్కడ వివరించబడింది.  
  1. నేను బ్రహ్మచర్య జీవితం గురించి మరింత తెలుసుకోవాలనుకుంటున్నాను. దాని గురించి ఏవైనా మార్గదర్శకాలు లేదా చదవదగిన రచనలు ఉన్నాయా?
బ్రహ్మచర్యంపై స్వామి వివేకానంద బోధనల నుండి సంకలనం చేయబడినవి ఇక్కడ అందుబాటులో ఉన్నాయి. అదేవిధంగా, ఈ క్రింద పేర్కొన్న రెండు పుస్తకాలలో ఉపయోగకరమైన మార్గదర్శకాలు లభిస్తాయి:
  • ‘యువతా! మేల్కోండి! మీ శక్తిని తెలుసుకోండి’ అనే పుస్తకంలో ‘బ్రహ్మచర్యం వల్ల కలిగే శక్తి’ అనే అధ్యాయం – రచయిత: స్వామి శ్రీకాంతానంద
  • ‘Spiritual Practice’ అనే పుస్తకంలో ‘బ్రహ్మచర్యం’ అనే అధ్యాయం – రచయిత: సామి అశోకానంద
 
  1. నేను సంఘంలో చేరిన తర్వాత, ఆధ్యాత్మికంగా మార్గనిర్దేశం చేసేవారెవరైనా అందుబాటులో ఉంటారా?
అవును, ఉంటారు. సంఘంలోని వరిష్ఠ సన్న్యాసులను ఆశ్రయిస్తే, సన్న్యాస జీవితంలోని ప్రతి అంశంలోనూ వారు మీకు మార్గనిర్దేశం చేస్తారు. అంతేకాకుండా, మీరు సరైన మార్గంలోనే పయనిస్తున్నారో, లేదో వారు మిమ్మల్ని పర్యవేక్షిస్తూ ఉంటారు.  
  1. నేను ఇంతవరకు మంత్రదీక్ష తీసుకోలేదు. నేను ఏమి చేయాలి?
మంత్రదీక్ష అంటే, ఆధ్యాత్మిక సాధకుడు గురువు ద్వారా మంత్రాన్ని పొందే ఒక విశేషమైన కార్యం. ఇందులో గురువు సాధకునికి మంత్రాన్ని, అంటే భగవంతుని పవిత్ర నామాన్ని ఉపదేశిస్తారు. ఆ మంత్రాన్ని ఎలా జపించాలో (జప విధానం), అలాగే ధ్యానం లేదా ఉపాసన ఎలా చేయాలో కూడా గురువు బోధిస్తారు. రామకృష్ణ సంఘంలో కేవలం సర్వాధ్యక్షులు మరియు ఉపాధ్యక్ష స్వామీజీలు మాత్రమే మంత్రదీక్షను ప్రసాదిస్తారు. ఒకవేళ మీరు వీరెవరి నుంచీ మంత్రదీక్ష పొందనట్లయితే, సంఘంలో చేరిన కొద్ది కాలానికి అందుకోసం తగిన ఏర్పాట్లు చేయబడతాయి.  
  1. నేను రామకృష్ణ సంఘంలోని ఏ శాఖలోనైనా చేరవచ్చా?
కొన్నింటిని మినహాయిస్తే, విదేశాలలో ఉన్న వాటితో సహా మా శాఖలన్నీ కొత్తవారిని చేర్చుకుంటాయి. మీరు బేలూరు మఠంలో కూడా చేరవచ్చు. కొత్తవారికి ఇక్కడ ప్రీ-ప్రొబేషనర్ శిక్షణా కేంద్రం (పిపిటిసి) ఉంది. కానీ, ఇంతకుముందు చెప్పినట్లుగా, మీరు ఎక్కడ చేరినా, బేలూరు మఠంలోని బ్రహ్మచారుల ప్రశిక్షణా కేంద్రం (టిసి)లో రెండు సంవత్సరాలు గడిపే అవకాశం తప్పకుండా దొరుకుతుంది.  
  1. బేలూరు మఠంలో చేరడంలో ఉన్న ప్రత్యేకత ఏమిటి?
బేలూరు మఠం రామకృష్ణ సంఘానికి కేంద్ర స్థానం. ఇక్కడే మా ప్రధాన మఠం నెలకొని ఉంది. ఇది మా ప్రధాన కార్యాలయం కూడా! స్వామి వివేకానంద మరియు శ్రీరామకృష్ణుల ప్రత్యక్ష సన్న్యాస శిష్యులలో కొందరు ఇక్కడ నివసించారు. ఈ పవిత్ర ఆధ్యాత్మిక అనుబంధాల వల్ల, చాలా మంది తమ సన్న్యాస జీవితాన్ని ఇక్కడే ఆరంభించాలని ఆశిస్తారు. నూతనంగా చేరిన వారికి ప్రీ-ప్రొబేషనర్ శిక్షణా కేంద్రం (పిపిటిసి)లో ఆరు నుంచి పన్నెండు నెలలు శిక్షణనిచ్చిన తరువాత, వారిని ఇతర శాఖా కేంద్రాలకు పంపిస్తారు.  
  1. మా పరిసరాల్లో ఒక రామకృష్ణ ఆశ్రమం ఉంది. నేను అక్కడ చేరవచ్చా?
శ్రీరామకృష్ణ లేదా స్వామి వివేకానంద పేరు కలిగి ఉన్న ఆశ్రమాలన్నీ మా శాఖలు కావు. కాబట్టి, మీరు ప్రస్తావించిన ఆశ్రమం మా గుర్తింపు పొందినదో, కాదో నిర్ధారించుకోండి. మా అధికారిక శాఖల వివరాలు మా వెబ్‌సైట్‌ <belurmath.org>లో ఉన్నాయి.  
  1. ప్రత్యేకించి మీ శాఖలలో ఒకటి నాకు నచ్చింది. నా జీవితాంతం సన్న్యాసిగా అక్కడే కొనసాగవచ్చా?
మీరు చేరిన శాఖలో గరిష్ఠంగా మూడు సంవత్సరాల వరకు కొనసాగవచ్చు. ఆ తర్వాత, మిమ్మల్ని ఏ శాఖకు పంపించాలనేది బేలూరు మఠంలోని వరిష్ఠ సన్న్యాసుల (మా ప్రధాన కార్యాలయం) నిర్ణయంపై ఆధారపడి ఉంటుంది. ఒకే శాఖలో జీవితమంతా గడపాలని కోరుకోవడం సన్న్యాస స్ఫూర్తికి విరుద్ధం. మీరు ఎంచుకున్న శాఖలో చేరి, అక్కడ మూడు సంవత్సరాల వరకు ఉండవచ్చు. ఆ తర్వాత, బేలూరు మఠంలోని వరిష్ఠ సాధువుల నిర్ణయం ప్రకారం సంఘంలోని ఏ శాఖకైనా వెళ్ళడానికి మీరు సంసిద్ధంగా ఉండాలి.  
  1. విదేశాలలో ప్రచారం చేసేందుకు నాకు అవకాశం లభిస్తుందా?
లభించవచ్చు లేదా లభించకపోవచ్చు. ప్రధాన కార్యాలయంలోని వరిష్ఠ సన్న్యాసులు అనేక అంశాలను పరిగణనలోకి తీసుకుని, ఎవరిని విదేశాలకు పంపించాలో నిర్ణయిస్తారు. వ్యక్తిగత అభిప్రాయాలను మరియు ఇష్టాయిష్టాలను విడిచిపెట్టి, భగవంతునిపట్ల శరణాగతి భావనతో సంఘంలో చేరడం ఉత్తమం.  
  1. సన్న్యాస జీవితం గురించి, మరియు రామకృష్ణ సంఘం గురించి సమగ్రంగా తెలుసుకోవడానికి మరేదైనా పుస్తకాన్ని సూచిస్తారా?
ఇంతకుముందు పదవ ప్రశ్నకు ఇచ్చిన సమాధానంలో చెప్పిన పుస్తకాలు సరిపోతాయి. ఇంకా కావాలనుకుంటే ఈ క్రింది రెండు పుస్తకాలను చదవచ్చు. *  The Glory of Monastic Life : By Swami Bhajanananda * Monasticism – Ideal and Traditions:  A Vedanta Kesari Presentation  
  1. ఒకవేళ నేను సంఘంలో ఉండలేకపోతే, బయటకు వెళ్ళిపోవచ్చా?
వెళ్లిపోవచ్చు. మీ సన్న్యాస జీవితంలో ఏ సమయంలోనైనా మీరు సంఘాన్ని వదిలి వెళ్ళిపోవచ్చు. ప్రజలు ఈ జీవితాన్ని స్వచ్ఛందంగానే స్వీకరిస్తారు, అదే విధంగా బయటకు కూడా వెళ్ళవచ్చు. ఈ విషయంలో ఇరువైపులా ఎటువంటి చట్టపరమైన లేదా ఆర్థికపరమైన బాధ్యతలకు తావు ఉండదు. సంఘాన్ని విడిచిపెట్టడం మీ ఆధ్యాత్మిక ప్రయాణానికి ముగింపు కాదు. మీరు ఎక్కడ ఉన్నా దానిని కొనసాగిస్తారు.  
  1. మంచిది. నా ప్రశ్నలన్నిటికీ సమాధానాలు వచ్చాయి. కానీ, నేను సంఘంలో చేరాలా లేక కుటుంబంలో సాధారణ జీవితాన్ని గడపాలా అనే సందిగ్ధంలో ఉన్నాను. నాకు సహాయం చేయగలరా?
ఇది మీరు మాత్రమే నిర్ణయించుకోవాల్సిన విషయం. అసలు మీ నిజమైన ఆసక్తి దేనిపై ఉందో తెలుసుకోవడానికి మీ మనస్సును నిశితంగా గమనించండి. మీ మనస్సు దృఢమవ్వాలనీ, స్థిరత్వాన్ని పొందాలనీ భగవంతుణ్ణి నిజాయితీగా ప్రార్థించండి. వివేకవంతులైన వారిని సంప్రదించి, ఈ విషయంలో వారి సలహా తీసుకోండి. కానీ, తుది నిర్ణయం మాత్రం మీ అంతరాత్మ నుంచే రావాలి.
 

NOTICE

Employees of the Headquarters and/or branches of Ramakrishna Math & Ramakrishna Mission, Belur Math who were members of RKM Provident Fund, Belur Math and who ceased to be in employment for a period of 120 months or more are hereby notified to register claim on ‘Unclaimed’ Balances in his/her Provident Fund account. The concerned employee(s) or his/her legitimate claimant(s) are requested to submit claim form with all necessary documents/evidence in support of the claim to the respective branch centre(s)/Headquarters, where the person(s) was/were employed, for onward submission to us within 60 days of publication of this notice. Failing which, the ‘Unclaimed Balance’ shall be transferred to an Employees Welfare Fund which shall be utilized for the welfare of the employees of Ramakrishna Math & Ramakrishna Mission, Belur Math. Display of this notice in the official Website of Ramakrishna Math & Ramakrishna Mission, Belur Math shall be deemed to be due intimation served as per statutory provisions. For more details, concerned employee(s)/ legitimate claimant(s) may contact nearest branch of Ramakrishna Math / Ramakrishna Mission.

Sd/-

Date: 09/02/2026                                                                    (Swami Bodhasarananda) Place: Belur Math                                                              Secretary, RKM Provident Fund

List of Employees with 'Unclaimed' Balance for 120 months or more as on 31/03/2026

The Sandhya Arati Timings at Sri Ramakrishna Temple, Belur Math

Note: The Sandhya Arati Timings are subject to change and each listed timing remains effective until the next mentioned date and time.

https://videopress.com/v/soARqxGn?resizeToParent=true&cover=true&posterUrl=https%3A%2F%2Fbelurmath.org%2Fwp-content%2Fuploads%2F2025%2F06%2Fkhandana-bhava-bandhana-e0a696e0a6a3e0a78de0a6a1e0a6a8-e0a6ade0a6ac-e0a6ace0a6a8e0a78de0a6a7e0a6a8-the-aratrik-bhajan-at-belur-math_mp4.scrubthumb.jpg&preloadContent=metadata&useAverageColor=true
DateFirst BellArati
April 076:10 PM6:20 PM
April 216:15 PM6:25 PM
May 036:20 PM6:30 PM
May 156:25 PM6:35 PM
May 266:30 PM6:40 PM
June 076:35 PM6:45 PM
June 236:40 PM6:50 PM
July 296:35 PM6:45 PM
August 076:30 PM6:40 PM
August 156:25 PM6:35 PM
August 216:20 PM6:30 PM
August 276:15 PM6:25 PM
September 016:10 PM6:20 PM
September 076:05 PM6:15 PM
September 126:00 PM6:10 PM
September 175:55 PM6:05 PM
September 225:50 PM6:00 PM
September 275:45 PM5:55 PM
October 025:40 PM5:50 PM
October 075:35 PM5:45 PM
October 135:30 PM5:40 PM
October 195:25 PM5:35 PM
October 255:20 PM5:30 PM
November 025:15 PM5:25 PM
November 125:10 PM5:20 PM
December 265:15 PM5:25 PM
January 035:20 PM5:30 PM
January 105:25 PM5:35 PM
January 185:30 PM5:40 PM
January 255:35 PM5:45 PM
February 015:40 PM5:50 PM
February 095:45 PM5:55 PM
February 185:50 PM6:00 PM
February 275:55 PM6:05 PM
March 116:00 PM6:10 PM
March 246:05 PM6:15 PM